ஐபிஎல் போட்டிகளில் இருந்து தன்னை ஓரங்கடியவர்களை பற்றி பேசிய டேவிட் வார்னர் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021 சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டி பல உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்று தான்…..!!!

ஏனென்றால் ஐபிஎல் 2021 தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை வழிநடத்தியவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சேர்ந்த டேவிட் வார்னர், முதல் 7 போட்டியில் 6 போட்டிகளில் வெறும் தோல்வியை மட்டுமே பெற்றது ஹைதெராபாத் அணி. அதனால் புள்ளிப்பட்டியளில் இறுதி இடத்தில் இருந்தது.

அதற்கு காரணம் ஹைதெராபாத் அணியின் கேப்டன் தான் காரணம் என்று பலர் கூறி வந்தனர். அதனால் உடனடியாக டேவிட் வார்னரை அணியில் இருந்து வெளியேற்ற உடனடியாக அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள். அவருக்கு (டேவிட் வார்னர்)க்கு பதிலாக கென் வில்லியம்சன் கேப்டனாக பொறுப்பேற்றார் …!!!!

அதுமட்டுமின்றி டேவிட் வார்னர்- க்கு அணியில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அதனால் அவர் சோகமாக இருக்கும் புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தனர். ஆனால் ஐபிஎல் 2021 முடிந்த சில நாட்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கியது.

அதில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்ற டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். அதுமட்டுமின்றி உலகக்கோப்பை 2021யில் அதிக ரன்களை அடித்த வீரராக டேவிட் வார்னர் திகழ்கிறார்….!! இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பற்றி கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.. !!!

சமீபத்தில் டேவிட் வார்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஒதுக்கப்பட்டதை பற்றி பேசியுள்ளார் ; அதில் “ஐபிஎல் போட்டிகளில் என்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் போக நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால், நான் எப்பொழுது பயிற்சி செய்தாலும், அது கடினமாக தான் இருக்கும். நான் எப்பொழுதும் அப்படி தான் செய்வேன்.

என்ன தான் பயங்கரமாக பயிற்சி செய்தாலும், அதனை சரியாக நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் உண்மை. அதற்கு சில நேரங்கள் எடுத்துக்கொள்ளும், அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர் …!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நிச்சியமாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாட போவதில்லை என்பது தான் உண்மை… !! புதிய அணியில் இடம்பெற போகிறாரா ?? அல்லது அதிக விலைக்கு ஏலத்தில் விற்க பட போகிறாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!!