கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். அதனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கியமான வீரர் டிவில்லியர்ஸ். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. அதில் சிறப்பினை ஆட்டத்தை விளையாடியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய 207 ரன்களை விளாசியுள்ளார்.
அதில் அதிகபட்சமாக 76 ரன்களை அடித்துள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தால், இவர் மீண்டும் தென்னாபிரிக்கா அணியில் விளையாட வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ்; இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகள் முடிந்த பிறகு தான் யோசிக்க வேண்டும்.
அக்டோபர் மாதத்தில் நடக்க போகிற டி-20 உலக கோப்பை போட்டியில் டிவில்லியர்ஸ் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் வெளியான செய்தியில் நிச்சியமாக நான் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட போவதில்லை.
ஆனால் காரணம் தெரியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். சமீபத்தில் மார்க் பவுச்சர் அளித்த பேட்டியில் ; இனிமேல் டிவில்லியர்ஸ், தென்னாபிரிக்கா அணியில் இடம்பெற போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளனர். ஏன் என்று கேட்டதுக்கு ; நான் அணியில் வருவதால் மற்ற வீரர்களின் முன்னேற்றத்தை தடுப்பது போல இருக்கிறது.
அதனால் தான் அவர் அணியில் மீண்டும் விளையாட போவதில்லை இல்லை என்று டிவில்லியர்ஸ் சொன்னார். அதனை நங்கள் மதிக்கிறோம் என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மீண்டும் டிவில்லியர்ஸ் தென்னாபிரிக்கா அணியில் விளையாடுவதை பார்க்கலாம் என்று ஆசையாக இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே.