ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இவருக்கு இதுதான் இறுதி வாய்ப்பு ; இதை மிஸ் பண்ணிட்ட.. ! பிறகு வாய்ப்பே இருக்காது ; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ; முழு விவரம் இதோ ;

0

இந்திய நாட்டில் பல இளம் வீரர்கள் அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு தான் வருகிறது.

அதிக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவதால் அதனால் இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேற்றிவிடுவார். அந்த நிலைமையில் தான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இப்பொழுதெல்லாம் சரியான வாய்ப்பே கிடைப்பது இல்லை….!!

கடந்த ஐசிசி உலகக்கோப்பை டி20 2021 போட்டிக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் தவான். அதன்பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஒருவழியாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தான் களமிறங்கியுள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிந்து இது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு, ஆனால் 36வயதான அவர் இதற்கு மேல் விளையாடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணி ஷிகர் தவானுக்கு பின் இருக்கும் வீரர்களை பார்க்க வேண்டும்.

விஜய் ஹசாரே கோப்பையில் ஷிகர் தவான் சொல்லும் அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை. இருந்தாலும் அவரை தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் எடுத்ததற்கு காரணம் என்ன ? ஒருவேளை சரியாக விளையாடவில்லை என்றால் ஒரேயடியாக வெளியேற்றுவதற்க்கான முடிவாக இருக்குமோ ? என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர்.

கவுதம் கம்பிர் சொல்வதும் சரிதான், இப்பொழுதெல்லாம் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் நேற்று களமிறங்கிய தவான் அதிகபட்சமாக 79 ரன்களை அடித்துள்ளார். அதனால் இரண்டாவது போட்டியிலும் அவருக்கான இடம் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெருவார்.

முதல் போட்டியின் சுருக்கம் ;

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 296 ரன்களை அடித்தனர். பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. இறுதி வரை போராடிய இந்திய அணி 265 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா. அதனால் 1 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.

மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். என்ன செய்ய போகிறது இந்திய அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here