இதனால் இந்திய அணிக்கு ஒரு ஆபத்தும் இல்லை ; விராட்கோலி பேசும் விதம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் பேட்டி ;

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு போட்டிகளை கண்டு வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 16வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை மட்டுமே அடித்தனர். அதிலும் விராட்கோலி மட்டும் தான் அதிகபட்சமாக 58 ரன்களை அடித்துள்ளார். பின்னர் ரிஷாப் பண்ட், 38 ரன்களை அடித்து இந்திய அணிக்கு ரன்களை சேர்ந்தனர். பின்பு 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாடின் அளித்த பேட்டியில் ; இந்திய அணியிடம் 6வதாக ஒரு பவுலர் இல்லை. ஏனென்றால் ஹார்டிக் பாண்டிய வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே உள்ளார்.

நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக இருந்த ஹார்டிக் பாண்டியவால் இப்பொழுது பவுலிங் செய்ய முடிவதில்லை. ஒரு போட்டியில் 6வதாக பவுலிங் இருந்தால் மட்டுமே ஏதாவது முடிவுகள் எடுக்க முடியும்.

ஷர்டுல் தாகூர் அணியில் இடம்பெற்றுள்ளது மிகவும் சரியான முடிவு தான் ஏனென்றால் அவர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் அவ்வப்போது செய்துகொண்டே வருகிறார்.

அதனால் எனக்கு தெரிஞ்சு இந்திய அணிக்கு இதனால் வருத்தம் ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் விராட்கோலி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, அவர் சொன்ன பதில் ” நல்ல ஒரு அணி எங்களை வென்று விட்டது. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று விராட்கோலி அவர்களை மதித்து பேசினார். எனக்கு விராட்கோலி ஒன்றும் கவலைப்படுவது போல ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார் பிராட் ஹாடின்.

அடுத்த போட்டியில் ஹார்டிக் பாண்டிய அணியில் விளையாட வேண்டுமா?? இல்லை வேண்டாமா ??? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!