இறுதி டெஸ்ட் போட்டியில் இவருக்கு இடமில்லை ; உறுதியாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து நாளை காலை 9:30 மணியளவில் அகமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வெல்ல வேண்டியது மிகவும் அவசியம் ; காரணம் ?

முதல் இரு டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் மேல் இடத்தில் உள்ளனர். இருப்பினும் நாளை தொடங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் உலகி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

வெல்லுமா இந்திய ?

முதல் இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வலுவாக இருந்த காரணத்தால் சிறப்பாக விளையாடி போட்டியில் வென்றனர். ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணிக்கு பின்னடைவு தான் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, மூன்றாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை வென்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அதனால் நான்காவது போட்டியில் இந்திய அணி வெல்ல அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. அதனால் நான்காவது போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஏதாவது மாற்றம் ஏற்படுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

உத்தேச அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூரியகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமத் ஷமி.

மூன்றாவது போட்டியை போலவே இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here