இந்திய இல்லை ; உலகக்கோப்பை போட்டியை வெல்ல போவது இந்த அணி தான் ; ரிக்கி பாண்டிங் உறுதி ; எந்த அணி தெரியுமா ?

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அதிலும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற போகிறது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.

அதனை நினைவில் வைத்து தான் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறார். இருப்பினும் 21 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை பற்றி இன்னும் எந்த அணியும் அறிவிக்காத நிலையில் யார் யார்விளையாட போகிறார்களே என்ற கேள்வி எழுந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி ஐசிசி உலகக்கோப்பை கைப்பற்றுவது இல்லை. அதிலும் கடந்த அண்டிய டி-20 உலகக்கோப்பை போட்டியில் மிகவும் மோசமான நிலையில் தான் விளையாடியது இந்திய. ஆனால், இந்த முறை எப்படியாவது போட்டியை வெல்ல அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது இந்திய.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்து வருகிறது. இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் ;

“எனக்கு தெரிந்து இந்த முறை இந்திய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இருஅணிகள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெரும். அதிலும் நிச்சியமாக ஆஸ்திரேலியா அணி நிச்சியமாக தொடரை கைப்பற்றும். ஏனென்றால் இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இது ஹாம் மைதானம் தான் அவர்களுக்கு தான் சுலபமாக இருக்கும்.”

“அதுமட்டுமின்றி இறுதியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது என்று கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.” கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு முறை தான் ஐசிசி டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளனர்.

அதேநேரத்தில், 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010ல் இங்கிலாந்து அணியும், 2012ல் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2014 இலங்கை அணியும், 2016 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றுள்ளனர். இந்த முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி-20 உலகக்கோப்பையை வெல்லுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here