HomeTrending Newsஇந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி விளையாடுவாரா ? இல்லையா ? தேர்வாளர் ஓபன் டாக்...

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி விளையாடுவாரா ? இல்லையா ? தேர்வாளர் ஓபன் டாக் ;

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அதில் 1 -1 என்ற நிலையில் உள்ளது. இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் தான் யார் தொடரை கைப்பற்ற போகிறார்கள் என்பது பற்றி தெரியும். இப்பொழுது நடக்கும் போட்டிகளை வைத்து தான் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு நடக்க போகின்ற உலகக்கோப்பை போட்டிகளில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று தெரியும்.

அதில் விராட்கோலி இடம்பெறுவாரா ? இல்லையா ? என்று பல குழப்பங்கள் எழுந்து வருகின்றனர். விராட்கோலி சமீப காலமாக எதிர்பார்க்கும் அளவிற்கு போட்டிகளில் விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை. இருப்பினும், அணியில் இருப்பது பலருக்கு பேசும் பொருளாக மாறியது தான் உண்மை.

விராட்கோலி 2019ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் விராட்கோலியின் ஆட்டம் இப்படியே தொடர்ந்தால் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்க போகிறது ? உலகக்கோப்பை போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா ?

இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சபா கரீம் சில முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளார். அதில் ” உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட்கோலி இருப்பாரா ? இல்லையா ? என்று இப்பொழுதே சொல்ல முடியாது.”

“ஆனால் அவரது விளையாட்டை மீண்டும் கொண்டு வர அவர் அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்து வருகிறார். அதனால் இந்திய அணியின் நிர்வாகம் விராட்கோலி பற்றிய தவறான கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம். விராட்கோலி மீண்டும் அவரது போர்மை கொண்டு வருவார் என்று நம்ப வேண்டும்.”

“நிச்சியமாக விராட்கோலி ஒரு சிறந்த வீரர் தான். முன்பு விளையாடிய போட்டிகளில் அவரது தரம் எந்த அளவிற்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் மக்கள் சொல்லும் தவறான கருத்துக்கள் விராட்கோலி-க்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்.”

“எங்கு தவறு நடந்தது, அதில் எப்படி மீளவேண்டும் என்பதை விராட்கோலி ஆராய்ந்து வருகிறார். அதனால் இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் இனிவரும் போட்டிகளில் ஓய்வு எடுக்காமல் விளையாடினால் சிறப்பாக விளையாடவும் மீண்டும் போரம்-க்கு திரும்பவும் உதவியாக இருக்கும்.”

“அதனால் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி அவரது முயற்சிக்கு ஆதரவாக இருந்து இன்னும் பல போட்டிகளில் விளையாட அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சபா கரீம்.”

அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி-20 2022 போட்டிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதில் விராட்கோலி இடம்பெற வேண்டுமா ? இடம்பெற்றால் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்குமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img