ஐபிஎல் 2021; தோனிக்கு காத்திருக்கும் மூன்று சாதனைகள் இருக்கிறது…! இந்த ஐபிஎல் சீசன் 14னில் தோனி அதை செய்வாரா?

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான்.

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக ரசிகர்களின் ஆதரவை பெற்று 13 சீசன் முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணி என்றல் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோனி அவரது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அவர் கூறினார். அதனால் இந்திய முழுவது கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை பார்க்க முடியும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறியது.

அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி காம்பேக் கொடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் இன்னும் சில வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

சிஎஸ்கே அணியின் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. இதில் தோனி வருகின்ற 14வது ஐபிஎல் போட்டியில் தோனி செய்விருக்கும் சாதனைகள்..அது என்ன தெறியுமா ??

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இதுவரை 186சிக்சர் அடித்துள்ளார் மகேந்திர சிங் தோனி . இன்னும் 14 சிக்சர் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்துவிடுவார். அதன்பிறகு டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6821 ரன்களை அடித்துள்ளார். அதனால் இன்னும் 179 ரன்களை அடித்தால் 7000 ரன்களை கடந்து விடுவார்.

அதுமட்டுமின்றி தோனி விக்கெட் கீப்பராக இன்னும் இரண்டு விக்கெட் எடுத்தால் 150+ விக்கெட் எடுத்த கேப்டனாக இருப்பர். அதனால் இந்த மூன்று சாதனைகளையும் செய்வாரா தோனி என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்..!