சதம் அடிக்காமையே டி-20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த முதல் 5 வீரர்கள் இவர்கள் தான்..! தோனிக்கு எத்தனாவது இடம் தெறியும்?

கிரிக்கெட் போட்டிகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது டி-20 லீக் போட்டிகள். அதாவது 20 ஓவர் போட்டிகளில் அதிகமாக ரன்களை குவித்துவருகின்றனர். அதேபோல தான் அவரவர் திறமையை குறுகிய போட்டியில் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்பொழுதெல்லாம், ஒருநாள் போட்டியில் ரன்களை அடிப்பதை விட அதிக ரன்களை டி-20 போட்டிகளில் விளாசுகின்றனர்.

அந்த டி-20 போட்டிகளில் சதம் அடிக்காமையே அதிக ரன்களை எடுத்துள்ளனர். அதில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் வீரர்கள் பட்டியல் இதோ :

1. ஷோபிக் மாலிக்

பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர் ஷோபிக் மாலிக். இதுவரை 169 போட்டிகளில் விளையாடிய இவர் 10488 ரன்களை எடுத்துள்ளார். அதில் 64 அரைசதம் விளாசியுள்ளார். இவர் தான் முதல் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்காமல் டி-20 ரன்களை அதிக ரன்களை எடுத்த வீரர்.

2. Eoin Morgan:

இப்பொழுது இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் ஈயின் மோர்கன், இதுவரை 31 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 7004 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் 37 அரைசதம் விளாசியுள்ளார், அதிகபட்சமாக 91 ரன்களை எடுத்துள்ளார் ஈயின் மோர்கன்.

3. Kumar Sangakkara :

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா ஒரு மிகப்பெரிய பேட்ஸ்மேன் எனபதால் மாற்றுக்கருத்தே இல்லை. டி-20 போட்டிகளில் மிகப்பெரிய அதிரடி பேட்ஸ்மேன் ஆன குமார் சங்கக்கார இதுவரை 267 போட்டிகளில் விளையாடி 6937 ரன்களை எடுத்துள்ளார்.

அதில் 43 அரைசதம் அடித்துள்ளார், அதிலும் அதிகபட்சமாக 78 ரன்களை விளாசியுள்ளார். குமார் சங்கக்கார ஸ்ட்ரிக் ரேட் 126.4 என்ற விகிதத்தில் ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. Robin Uthappa:

கடந்த 2007ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் ராபின் உத்தப்பா. இவர் ஒரு அருமையான டி-20 வீரர் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை 273 போட்டிகளில் விளையாடி 6861 ரன்களை அடித்துள்ளார்.

அதில் 38 அரைசதம் மற்றும் அதிகபட்சமாக 92 ரன்களை விளாசியுள்ளார் ராபின் உத்தப்பா. இப்பொழுது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. மகேந்திர சிங் தோனி :

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இதுவரை 338 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 6858 ரன்களை விளாசியுள்ளார். 39வயதான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு 2020 செப்டம்பர் மாதத்தில் அவரது ஓய்வு பெற்றார். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 27 அரைசதம் டி-20 போட்டிகளில் அடித்துள்ளார்ஆனால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிலும் அதிகபட்சமாக 84 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார் மகேந்திர சிங் தோனி.