இந்த மாதிரி கேப்டன் மீண்டும் இந்தியாவுக்கு கிடைப்பது ரொம்ப கஷ்டம் தான் ; சேவாக் கருத்து….ஓ இவர் தான் அந்த கேப்டனா…!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 லீக் போட்டிகள் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில்பி பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அதிரடியாக விளையாடி 188 ரன்களை அடித்தனர்.

பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதனால் புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. அவ்வப்போது நடக்கும் போட்டிகளை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருவார்கள்.

அதேபோல தான் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக் போட்டியை பற்றியும் சில வீரர்களை பற்றி பேசியுள்ளார். அதில் தோனி ஒரு சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு நல்ல தெரியும் எப்படி பவுளர்களிடம் இருந்து சரியான பந்து வீச்சை வங்குவது என்று. அதுமட்டுமின்றி தோனியை போல ஒரு கேப்டன் நிச்சியமாக இந்திய அணிக்கு இனிமேல் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார் சேவாக்.