இரு இந்திய பவுலர்களின் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது ; மாஸ் வெற்றியை கைப்பற்றியது இந்திய ;

0

நேற்று இரவு 8 மணியளவில் தொடங்கிய போட்டி சென்ட்ரல் ப்ரோவ்ர்டு பார்க் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் பவர் ப்ளேவில் அமைந்தது. ஆனால் அதன்பின்னர் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவர் விக்கெட்டை இழந்தனர்.

ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 3, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, ரிஷாப் பண்ட் 44, சஞ்சு சாம்சன் 30*, தினேஷ் கார்த்திக் 6,அக்சர் பட்டேல் 20* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் நிக்கோலஸ் பூரானின் அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது தான் உண்மை. ஆமாம், 7 பந்தில் 24 ரன்களை அடித்துள்ளார்.

தொடர்ந்து சிக்ஸர் , பவுண்டரிகளை அடித்து கொண்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமான ரன் – அவுட் ஆனார். அதனால் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. அதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டு விளையாடிய நிலையில் 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 132 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக பிராண்டன் கிங் 13, மாயேர்ஸ் 14, டேவன் தாமஸ் 1, நிக்கோலஸ் பூரான் 24, போவெல் 24, ஹெட்மயேர் 19, ஜேசன் ஹோல்டர் 13, டோமினிக் ட்ராக்ஸ் 5 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி.

அதுமட்டுமின்றி 3 – 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள இந்திய அணி டி-20 போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளனர். வெற்றிக்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் பவுலர்களான அவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் அசத்தலான பவுலிங் தான்.

ஏனென்றால் பவர் ப்ளேவில் முக்கியமான 2 விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி ஒரு ஓவருக்கு 4.20 ரன்கள் என்ற விகிதத்தில் தான் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அர்ஷதீப் சிங் 3.1 ஓவர் பவுலிங் செய்து இரண்டு விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி ஓவருக்கு வெறும் 3.80 என்ற விகிதத்தில் தான் ரன்களை கொடுத்துள்ளார்.

இதில் அவேஷ் கானை விட , ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியில் அர்ஷதீப் சிங் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..! ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா ? இல்லையா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here