நடராஜன் இல்லை ; இரண்டு தமிழக வீரர்களை ஐபிஎல் அணிகளில் தக்கவைத்து கொள்ளப்போகிறார்கள்…! அட்ரா சக்க..!

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் கூடிய விரைவில் நடைபெற போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அணிகளின் உரிமையாளர் கூட ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். பெரும்பாலும் எப்பொழுதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டுமின்றி இந்திய அணியிலும் தமிழக வீரர்களுக்கு வாய்ப்புகள் சரியாக கொடுப்பதில்லை என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அப்படி பார்த்தால் இந்த முறை இரு அணிகளில் தலா ஒரு தமிழக வீரர்களை தக்கவைத்து போவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் யார் அந்த வீரர்கள் ? எந்த அணியில் தக்கவைத்து கொள்ள போகிறார்கள் ? தெரியுமா……..????????

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவத்தி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடராஜன் ஆகிய மூன்று தமிழக வீரர்களை விளையாடி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளதால். அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளில் தலா 4 வீரர்கள் தக்க வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ. அப்படி பார்த்தால் நிச்சயமாக அனைத்து அணிகளும் முக்கியமான வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ளப்படுவார்கள்.

அதில் தமிழக வீரர்களும் முக்கியமான கருதப்படும் இரு அணிகள் இதுதான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவாதி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக்கான் ஆகிய இரு வீரர்களையும் அவரவர் அணிகள் தக்கவைத்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த நடராஜன் இந்த முறை அணியில் தக்கவைத்து படுவாரா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் முதல் வீரராக கென் வில்லியம்சன், ரஷீத் கான் போன்ற இரு வீரர்களைதக்கவைத்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் நிச்சியமாக நடராஜன் ஏலத்தில் இடம்பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. அப்படி பார்த்தால் எந்த அணியில் இடம்பெற போகிறார் ?? என்பதை பொறுத்துப்பார்க்க வேண்டும். சமீப காலமாக சரியாக வாய்ப்பு நடராஜனுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை…!