சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரரான நடராஜன் இடத்தை தட்டி சென்ற வட இந்தியர் ; அட கொடுமையே …!

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் அறிமுகமாகியுள்ளது. லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் தான்..!

அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்த போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ. அதனால் யார் யார் தக்கவைத்து கொள்ள போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்தன.

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன்தினம் தான், அனைத்து அணிகளும் யார் யாரை தக்க வைத்தது என்ற தகவலை வெளியிட்டது. அதில் சில ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாகவும், பல ரசிகர்கள் எதிர்பாராத நிறைய விஷயங்கள் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழக வீரரான நடராஜன் தான். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் ப்ளேயிங் 11 இடத்தை பிடித்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யாக்கர் மன்னன் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பின்னர் இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. சரியான நேரத்தில் ஒரு சில விக்கெட்டை எடுத்து இந்திய அணியில் சிறப்பான இடத்தை தக்கவைத்தார். ஆனால் போக போக அவருக்கு சரியான வாய்ப்பு கிடைப்பது இல்லை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021 இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு பதிலாக உமர் மலிக் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, உமர் மலிக் சிறப்பாக விளையாடியதால் அவரை உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு வலை பந்து வீச்சாளராக தேர்வு செய்தது.

இப்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் கென் வில்லியம்சன், உமர் மலிக் மற்றும் அப்துல் சமத் போன்ற மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்து வைத்துள்ளது. சரியான நேரத்தை பயன்படுத்தி கொடுத்த வாய்ப்பையும் சரியான பயன்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடத்தை தக்கவைத்து கொண்டார்.

நடராஜன் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியில் இடம்பெறுவார்? அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுமா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!