வீடியோ ; அடக்கொடுமையே ..இப்படியெல்லாமா …ரன் அவுட் ஆவிங்க…! மிகவும் அரிதான ரன் அவுட்…..

ஐபிஎல் 2021, தொடரின் 29வது போட்டியில் மயங்க அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயங்க அகர்வால் தவற வேறு யாரும் அதிக ரன்களை எடுக்கவில்லை, என்பதே உண்மை.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 166 ரன்களை விளாசியுள்ளனர். அதில் பிரபாசிம்ரான் 12 ரன்கள், மயங்க அகர்வால் 99 ரன்கள், கிறிஸ் கெய்ல் 13 ரன்கள், மலன் 26 ரன்கள், தீபக் ஹூடா 1 ரன்கள், ஷாருகான் 4 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்பு 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 17.4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்களை அடித்து வெற்றியிற் கைப்பற்றியுள்ளனர். அதில் ப்ரித்வி ஷாவ் 39 ரன்கள், தவான் 69 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள், ரிஷாப் பண்ட் 14 ரன்களை அடித்துள்ளார்.

வெற்றியை கைப்பற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் போது நடந்த ரன் அவுட் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த போட்டியில் 13.2 ஓவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சூழல் பந்து வீச்சாளர் வீசிய பந்தை மயங்க அகர்வால் எதிர்கொண்டார். அப்பொழுது அதனை அடித்துவிட்டு ரன் ஓடினார். ஆனால் எதிரில் இருந்த தீபக் ஹூடா ரன்ஓடுவது போல, முன்னாள் சென்று பிறகு மீண்டும் அவர் இடத்துக்கு வந்துவிட்டார்.

அதனை கவனிக்காமல் மயங்க அகர்வால் ரன் ஓடிவிட்டார். இதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. வீடியோ இதோ;