HomeTrending Newsவீடியோ : தோனி மட்டும் இல்லையென்றால் இது நடந்திருக்காது ; ரோஹித் சர்மா ஓபன் டாக்...

வீடியோ : தோனி மட்டும் இல்லையென்றால் இது நடந்திருக்காது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. சமீபத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி இறுதி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

அதனால் டெஸ்ட் போட்டிகள் சம நிலையில் முடிந்துள்ளது.

தல கேப்டன் :

மகேந்திர சிங் டோனி கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். பின்னர் கங்குலி-க்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். ஆமாம், தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது.

தோனி கேப்டனாக விளையாடிய போது பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல தான் ரோஹித் சர்மாவுக்கு தொடக்க வீரராக அறிமுகம் செய்ததே தோனி தான். அதில் இருந்து இப்பொழுது வரை இந்திய அணியின் முக்கியமான தொடக்க வீரராக திகழ்கிறார் ரோஹித்.

நேற்று ஜூலை 7 தோனியின் பிறந்த நாள் , இதனை உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் அதனை கொண்டாடி உள்ளனர். அதுமட்டுமின்றி, தோனி அவரது பிறந்தநாளை இங்கிலாந்து நாட்டில் கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ரோஹித் மற்றும் தோனி இடையேயான நட்பை பற்றி ஒரு வீடியோ வைரலானது.

அதில் ரோஹித் சர்மா, ஷர்டுல் தாகூர் ஆகிய இருவரும் பேசிக்கொண்டு வந்தனர். ஆனால் தோனி கூப்பிட்ட பிறகு உடனடியாக அங்கிருந்து தோனியுடன் சென்றார் ரோஹித் சர்மா. சமீபத்தில் தோனியை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ;

“எனக்கு இன்னும் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக தோனி செய்ததை மறக்கவே மாட்டேன். தொடக்க வீரருக்கான முடிவு தோனி தான் எடுத்தார். அதன்பின்னர் தான் நான் சிறப்பாக விளையாட தொடங்கினேன். அதனால் தான் ஒரு போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட தொடங்கினேன் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img