HomeTour Seriesவீடியோ : இதுதான் Karma- ஆ ? பழிதீர்த்து கொண்ட விராட்கோலி ..!

வீடியோ : இதுதான் Karma- ஆ ? பழிதீர்த்து கொண்ட விராட்கோலி ..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 416 ரன்களை விளாசியது. அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் அடித்தார். பின்பு களமிறங்கியது இங்கிலாந்து அணி. இந்திய அணியை போலவே சரியான தொடக்க ஆட்டம் அமையாமல் போனது.

இருப்பினும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பரிஸ்டோவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த பிறகு மற்ற வீரர்கள் யாரும் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. அதனால் முதல் இன்னிங்ஸ்- முடிவில் 284 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி 137 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதற்கடையில் தான் விராட்கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் பரிஸ்டோவ் ஆகிய இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் விராட்கோலி ” நீ பேட்டிங் செய்வதை மட்டும் கவனி நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ எனக்கு சொல்லாதே என்று கூறியுள்ளார் விராட்கோலி. இந்த மோதலுக்கு பிறகு பரிஸ்டோவ் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

ஆமாம், பரிஸ்டோவ் சிறப்பாக விளையாடி 106 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். சரியாக 54.1 ஓவர் பவுலிங் செய்தார் முகமத் ஷமி, அதனை எதிர்கொண்டார் பரிஸ்டோவ். அப்பொழுது எதிர்பாராத விதமான பேட்-டில் பட்ட பந்து விராட்கோலி கைக்கு நேர் சென்றது. அதனை பிடித்த விராட்கோலி, மிகவும் சந்தோசம் அடைந்தார்.

வீடியோ :

இரு அணிகளும் முதல் இன்னிங்ஸ் விளையாடி முடிந்த நிலையில் இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கி இதுவரை 3 ஓவர் மட்டுமே முடிந்துள்ளது, அதில் சுமன் சில விக்கெட்டை இழந்துள்ளார். 13 ரன்களை அடித்துள்ளது இந்திய. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெல்லுமா ? இந்திய அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img