இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்க உள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் விராட்கோலி இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக தான் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார்.


டாஸ் வென்ற பிறகு பேட்டி கொடுத்த கே.எல்.ராகுல் ; எதிர்பாராத விதமாக விராட்கோலி முதுகில் பலமாக அடிப்பட்டுள்ளது. அதனை அவர் மற்றும் மருத்துவ குழு சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளனர். அதனால் நிச்சியமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் விராட்கோலி களமிறங்குவார். இந்திய அணியை வழிநடத்துவது என்பது பலருடைய கனவாக இருக்கும் அது இப்போ எனக்கு நடந்துள்ளது.
இந்த மாதிரி முக்கியமான நேரங்களில் விராட்கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லை என்பது கடினம் தான். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் முன்னேறி செல்ல வேண்டும். விராட்கோலி க்கு பதிலாக விஹாரி இடம்பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.


இந்திய அணியின் விவரம் ; கேப்டன் (கே.எல்.ராகுல்), மயங்க் அகர்வால், புஜரா, ரஹானே, விஹாரி, ரிஷாப் பண்ட் , ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்டோரின் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது.
விராட்கோலி இல்லாமல், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய போட்டியயில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற உதவுமா ?? இந்த முறையும் ஐந்து பவுலர்கள் வைத்து விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட், முதல் டெஸ்ட் போட்டி சாதகமாக இருந்தாலும் அதேபோல வெற்றியை கொண்டாடுமா இந்திய ??