விராட்கோலியை சில போட்டிகளில் ரத்து செய்து, அவருக்கு அபராதம் போட வேண்டும் ; மைக்கல் வகான் அதிரடி பேட்டி ; காரணம் இதுதான் ;

0

என்ன விராட்கோலி இப்படி பண்ணிட்டு இருக்காரு ? அவரை போட்டிகளில் இருந்து ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவருக்கு அபராதம் போட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் கூறியுள்ளார். அப்படி என்ன தான் செய்தார் விராட்கோலி ? முழு விவரம் இதோ ;

நேற்று தான் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 223 ரன்களை அடித்தது. பின்னர் தென்னாபிரிக்கா அணி 198 ரன்கள் அடித்தது. அதனால் வெற்றி பெற கொஞ்சம் வாய்ப்பு இருந்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 198 ரன்களை மட்டுமே அடித்தது.

அதிலும் ரிஷாப் பண்ட் மட்டுமே 100 ரன்களை அடித்துள்ளார். இறுதியாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 212 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது. அதிலும் அதிகப்படியான விக்கெட்டை இழக்காமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி.

அதில் விராட்கோலி செய்த செயலால் கடுப்பில் உள்ளார். அப்படி என்ன செய்தார் விராட்கோலி ?

சரியாக சவுத் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான டீன் எல்கர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் செய்தார். அப்பொழுதுக்கு எல்கர் காலில் சரியாக பட்டது. அதில் நன்கு தெரிகிறது , ஆனால் டிவி நடுவர் காட்டியதில் பந்து பௌன்ச் ஆகி ஸ்டும்ப் மேல் சென்றது. அதனால் தொழில்நுட்பத்தை பற்றி பேசியுள்ளார் விராட்கோலி.

விராட்கோலி எப்பொழுது அவரை கோபத்தை அல்லது சந்தோஷத்தை எப்பொழுதும் அவ்வப்போது ஆக்கரோசமாக தான் வெளிப்படுத்துவார். அதேபோல, இந்த DRS பிரச்சனைக்கு ஸ்டும்ப் பக்கத்தில் சென்ற கோபத்தை வெளிப்படையாக பேசினார் விராட்கோலி. அதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

விராட்கோலியின் செயலை பற்றி பேசிய வகான் ; விராட்கோலியின் இந்த செயலை நிச்சியமாக கண்டிக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி கண்டிப்பாக சில போட்டிகளில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவருக்கு அபராதம் போட வேண்டும் என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன். இவர் இப்பொழுது மட்டுமின்றி, எப்பொழுதும் இந்திய அணியை பற்றியும், வீரர்களை பற்றி இஷ்டத்துக்கு அவரது கருத்தை கூறுவது இயல்பு.

ஆனால் தவறாக செய்த செயலை விராட்கோலி வெளிப்படையாக அதனை பற்றி பேசியது சரி தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here