அவருக்காக விராட்கோலி இப்படி செய்தது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் உள்ளது ; முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ;

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் டெஸ்ட் வீரர் மற்றும் டெஸ்ட் கிங் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தான். சமீபத்தில் தான் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ; விராட்கோலி பற்றி பல முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்ற போது, இந்திய அணிக்கான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அதில் 10 விக்கெட்டை வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. அதனால் இந்திய அணியின் பவுலிங் சரியில்லை என்று பல கருத்துகள் சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி-யையும் அவரது சமுதாயத்தை பற்றியும் தவறாக பேசிக்கொண்டு கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். அதனை பற்றி பேசிய ரவி சாஸ்திரி ; முகமது ஷமி , விமர்சித்த போது விராட்கோலி புத்திசாலி தனமாக அவருக்கு உதவியாக இருந்தார், அவருக்காக (முகமது ஷமி) ஆதரவு தரும் வகையில் பேசினார்.

அதுமட்டுமின்றி, முகமது ஷமி திறமையான வீரர், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக தான் இருந்து வருகிறார். இந்திய அணி வெற்றி பெற்றால், அதில் நிச்சியமாக ஷமி, பும்ரா, உமேஷ், இஷாந்த் சர்மா ஆகிய அனைவரும் அந்த வெற்றிக்கு காரணமாக இருப்பார்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு போட்டியை வைத்து எந்த வீரரையும் சரியாக கணிக்க முடியாது.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் , பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் வெட் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க தவரவிட்டார். அதனால் தான் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததற்கு காரணம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, கிரிக்கெட் என்றால் டீம் விளையாட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்…!!

வருகின்ற 17ஆம் தேதி முதல் இந்திய அணிக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள ராகுல் டிராவிட் வழிநடத்த உள்ளார். அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் டி20 போட்டியில் மோத உள்ளனர். சமிபத்தில் தான் டி-20 போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதில்