வீடியோ : பா…..! இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க ; விராட்கோலி விக்கெட் ; வாயடைத்து போன RCB ரசிகர்கள் ;

ஐபிஎல் 2023 : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

இதுவரை 30 போட்டிகளில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும், பெங்களூர் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு கான்வே , ராயுடு மற்றும் சிவம் துபே போன்ற மூன்று வீரர்களும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 226 ரன்களை அடித்தனர். அதில் கான்வே 83, ரஹானே 37, ஷிவம் துபே 52, ராயுடு 14, மொயின் அலி 19 ரன்களை அடித்தனர். பின்பு 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய விளையாடி வருகிறது பெங்களூர் அணி.

இதில் விராட்கோலி மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் போட்டியை விளையாட தொடங்கினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் விராட்கோலி விக்கெட் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆமாம், முதல் ஓவரில் ஆகாஷ் சிங் வீசிய பந்தை எதிர்கொண்டார் விராட்கோலி.

அப்பொழுது பந்தை அடித்த விராட்கோலி காலில் பட்டு ஸ்டம்ப்-ல் பட்டது. அதனால் விராட்கோலி விக்கெட்டை இழந்தார். இதனை பார்த்த விராட்கோலியின் மனைவி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இதனை தொடர்ந்து வீரரான மஹிபால் லொம்ரோர் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார்.

3 ஓவர் முடிந்த நிலையில் பெங்களூர் அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில் 28 ரன்களை அடித்துள்ளனர். அதில் விராட்கோலி 6, டூப்ளஸிஸ் 7*, மேக்ஸ்வெல் 12* ரன்களை அடித்துள்ளனர்.

வீடியோ: