இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது.


இருப்பினும் டெஸ்ட் போட்டிக்கான தொடர் ட்ராவில் முடிந்தது. அதுமட்டுமின்றி நாளை முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் இரு மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.
அதனால் இந்த மாதிரியான தொடர் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை வைத்து தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய போகின்றனர். இருப்பினும் இந்திய அணியில் பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.


இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி சமீப காலமாக பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் விராட்.
இதுவரை 70 சதம் அடித்த விராட்கோலி, நிச்சயமாக 100 சதம் அடித்து சச்சின் செய்த சாதனையை முறியடிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு விராட்கோலி இதுவரை ஒரு முறை கூட சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.


அஜய் ஜடேஜா பேட்டி:
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறுகையில் ; “எப்பொழுது ஒரு அணியில் விளையாடினால் இரண்டு விஷயம் தான் நடக்கும். ஒன்று சிறப்பாக விளையாடு அல்லது அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் தர வேண்டும்.”
“விராட்கோலி எப்பொழுதும் சிறப்பான வீரர் தான். அப்படி இல்லையென்றால் அவரால் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது. கடந்த 10 போட்டிகளில் அவர் சதம் அடிக்கவில்லை. அதனால் அவரை (விராட்கோலி) அணியில் இருந்து வெளியேற்ற முடியுமா ?”


“அவரை வெளியேற்றவே முடியாது, ஏனென்றால் அவர் கடந்த காலத்தில் விளையாடிய விஷயத்தை மறக்கவே முடியாது. விராட்கோலி மிகவும் முக்கியமான வீரர். ஏனென்றால் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட்கோலி நிச்சயமாக ரன்களை அடிக்க கூடிய வீரர்கள் தான்.”
“இறுதி 4 ஓவரில் 60 ரன்கள் தேவையென்றால் நிச்சியமாக அந்த இடத்தில் தோனி இருப்பார். அதேபோல தான், யார் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. விராட்கோலி-க்கு பதிலாக பல வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனால் தேர்வு செய்வது மிகவும் கடினம் தான்.”


“என்னை டி-20 போட்டிக்கான அணியை தேர்வு செய்ய சொன்னால், அதில் நிச்சியமாக விராட்கோலி இடம்பெற மாட்டார் என்று கூறியுள்ளார் அஜய் ஜடேஜா.”
வருகின்ற 2022 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட்கோலி இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? விராட்கோலி கம்பேக் கொடுப்பாரா ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!