வீடியோ ; திரும்ப வந்துட்டேனு சொல்லு ; மிடில் ஆர்டரில் COMEBACK-க்கு காத்திருக்கும் இந்திய ரசிகர்கள் ;

ஆசிய கோப்பை 2022 டி-20 லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முறை இலங்கையில் நடைபெற உள்ள போட்டி, சில பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆசிய கோப்பை 2022ல் மொத்தம் ஆறு அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் மீதமுள்ள இறுதி இடத்தில் இடம்பெற ஹாங் காங், சிங்கப்பூர், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அணிகளுக்குள் கடும் போட்டிகள் நிலவி வருகிறது.

இந்திய அணியின் கம்பேக்:

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்தியா அணிய மிகவும் மோசமான நிலையில் வெளியேறியது. ஆனால், அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியின் கம்பேக்-க்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆமாம், இதுவரை 70 சதம் அடித்துள்ள விராட்கோலி அதன்பின்னர் மூன்று வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவிழந்து காணப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஆவது கம்பேக் கொடுப்பாரா ? விராட்கோலி என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

வீடியோ: இந்திய, பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதில் விராட்கோலி பயிற்சியின் போது சுழல் பந்து வீச்சாளரின் பந்துகளை அடித்து தொம்சம் செய்துள்ளார் விராட்கோலி. அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான்.