AsiaCup : ஹாங் காங் கேப்டன் சொன்னதை செய்து காட்டிய விராட்கோலி ; பா..! மாஸ் கம்பேக் இதுதான் போல ;

0

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங் ஆங் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தில் சற்று சோர்வான ஒரு போட்டியை பார்க்க முடிந்தது. அதற்கு முக்கியமான காரணமாக கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடியது தான். இருப்பினும் ரன்களை தொடர்ந்து அடித்தனர் இந்திய வீரர்கள்.

பின்பு விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்தது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 36, ரோஹித் சர்மா 21, விராட்கோலி 59, சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரையோ அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.

ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய ஹாங் காங் அணியால் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41, கின்சீட் ஷா 30, ஸிஸ்ஷன் அலி 26 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை சூப்பர் 4 லீக் சுற்றுக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. இதுவரை குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய அணியும், குரூப் ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலியின் கம்பேக் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த விஷயம் தான். ஆமாம், விராட்கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக போர்மில் இல்லாமல் விளையாடி கொண்டு வந்தார். அதுமட்டுமின்று , ஆசிய கோப்பை முன்பு நடைபெற்ற போட்டிகளில் அதிகமாக 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார் விராட்கோலி.

இருப்பினும் விராட்கோலி நிச்சியமாக கம்பேக் கொடுப்பார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்தநிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்களை அடித்தார். அந்த நேரத்தில் விராட்கோலி அடித்த ரன்களும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான ஒன்று தான் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தான் போட்டி முடிந்த பிறகு ஹாங் காங் கேப்டனான நிசாகட் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ; “நான் விராட்கோலியின் மிகப்பெரிய ரசிகன், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதேபோல தான் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடிக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.”

அதேபோலவே நீண்ட நாட்கள் கழித்து நேற்று நடந்த போட்டியில் விராட்கோலி சிறப்பாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 44 பந்தில் 59 ரன்களை விளாசியுள்ளார். விராட்கோலியின் அதிரடியான இனிவரும் போட்டிகளில் தொடருமா ?? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here