நேற்று நடந்த ஐபிஎல் 23 வது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்துள்ளனர். அதில் வார்னர் 57 ரன்கள், பாரிஸ்டாவ் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 61 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள், கெதர் ஜாதவ் 12 ரன்களை விளாசியுள்ளார். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி.
18.3 ஓவர் முடிவில் 173 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்கள், டுபலஸிஸ் 56 ரன்கள், மொயின் அலி 15 ரன்கள், ஜடேஜா 7 ரன்கள் மற்றும் சுரேஷ் ரெய்னா 17 ரன்கள் எடுத்துள்ளனர்.
இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டியை வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி புள்ளிப்பட்டியளில் இறுதி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பிறகு சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டன் வார்னர் ; இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனென்றால் நான் அடித்த நிறைய பந்துகள் சிஎஸ்கே அணியின் பீல்டிங் பக்கத்தில் சென்றது. அதனால் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயமாக விரக்தி ஏற்படும். அதேபோல தான் எனக்கும் ஏற்பட்டது.
நான் அடிக்க முயன்ற நிறைய பந்துகள் பவுண்டரி செல்ல வில்லை. அதனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வில்லியம்சன் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளார். அவர் அடித்த ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர்.