நேற்று இலங்கையில் உள்ள கல்லே மைதானத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியும் டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகின்றனர். அதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.


அதன்படி முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணி 59 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்த நிலையில் 212 ரன்களை அடித்தனர். அதிலும் அதிகபட்சமாக பாத்தும் நிஸ்ஸங்க 23, கருணாரத்னே 28, மத்தியூஸ் 39, டிக்வெல்ல 58 ரன்களை அடித்துள்ளனர்.
அதில் ஆஸ்திரேலியா வீரர் லியொன் அதிகபட்சமாக 5 விக்கெட்யும், ஸ்வீப்சன் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 25 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டை இழந்த நிலையில் 98 ரன்களை அடித்துள்ளனர்.


அதில் உஸ்மான் கவாஜா 47, டேவிட் வார்னர் 25, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களை அடித்துள்ளனர். இதற்கிடையில் தான், இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் தொடக்க வீரரான நிஸ்ஸங்க மற்றும் கருணாரத்னே ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை விளையாடி வந்தனர்.
அப்பொழுது 29.2 ஓவரில் ஆஸ்திரேலியா பவுலர் லியொன் வீசிய பந்தை எதிர்கொண்டார் இலங்கை பேட்ஸ்மேன் கருணாரத்னே அப்பொழுது அனைவரும் LBW -வுக்கு நடுவரிடம் விக்கெட்டை கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல், டிராவிட் வார்னர் அந்த பந்தை தாவிப்பிடித்தார்.
பின்னர் நடுவரிடம் அது LBW ஆ ? இல்லையா ?? என்று கேட்ட போது அது LBW இல்லை. அதனால் டேவிட் வார்னர் பிடித்த கேட்ச் அது விக்கெட்- ஆக மாறியது. அதனால் பார்ட்னெர்ஷிப் இழந்த இலங்கை அணியால் சரியான பார்ட்னெர்ஷிப் அமைத்துக்கொள்ள முடியவில்லை…!
Everyone went up for LBW.. David Warner kept his eye on the prize and took an absolute ripper! #SLvAUS pic.twitter.com/f7cdguPs39
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) June 29, 2022
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் டி-20 தொடரை ஆஸ்திரேலியா அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரை இலங்கை அணியும் வென்றுள்ளனர்.
அதனை அடுத்து இப்பொழுது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்..! டெஸ்ட் போட்டியில் யார் தொடரை கைப்பற்ற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..!