வார்னர் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் பேட்டிங் செய்யவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின.
டாஸ் வென்ற சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைஸ்சர்ஸ் அணிக்கு தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை என்றாலும், வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே பார்ட்னெர்ஷிப் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அதனால் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் அடித்துள்ளனர்.
அதில் டேவிட் வார்னர் 57 ரன்கள், பரிஸ்டோவ் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 61 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள் மற்றும் கேதர் ஜாதவ் 12 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்கள் , டுபளஸிஸ் 56 ரன்கள், மொயின் அலி 15 ரன்கள், ஜடேஜா 7 ரன்கள், சுரேஷ் ரெய்னா 17 ரன்களை விளாசியுள்ளார்.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர் முடிவில் 173 ரன்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதனால் புள்ளிப்பட்டியளில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தோல்வியை சந்தித்த சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி புள்ளிப்பட்டியளில் இறுதி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரரான வார்னர் மிகசிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பந்துவீச்சை வார்னர் அடிக்காமல் மிகவும் கடினப்பட்டார். அதனால் இறுதி வரை போராடி 55 பந்தில் 57 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
பல பந்தை மிஸ் செய்த போதும், பல பந்தை பவுண்டரி லைன் அடித்தும் அதனை சிஎஸ்கே வீரர்கள் அதனை பிடித்துவிட்டார்கள். அதனால் வார்னர் மிகவும் மனம் வேதனை அடைந்துள்ளனர். அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;