வீடியோ ; சத்தியமா நம்பவே முடியல..! செம கேட்ச் பிடித்த தமிழக வீரர்…வேற லெவல்..! ஐபிஎல் 2021

மேட்ச் 1: விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் லைன் நல்ல பார்ட்னெர்ஷிப் அமையும் கொண்டு இருந்த போது…! ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகிவிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழந்த நிலையில் 159 ரன்களை எடுத்துள்ளது. அதில் கிறிஸ் லைன் 49 ரன்கள், சூர்யா குமார் யாதவ் 31 ரன்கள், இஷான் கிஷான் 28 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 13 ரன்கள், பொல்லார்ட் 7 ரன்கள், குர்னல் பாண்டிய 7 ரன்களை எடுத்துள்ளனர்.

160 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற களமிறங்கிய பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்கள் இறுதி வரை போராடி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றனர். அதில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள், விராட் கோலி 33 ரன்கள், ரஜத் படிடார் 8 ரன்கள், மேக்ஸ்வெல் 39 ரன்கள், டி வில்லியர்ஸ் 48 ரன்கள், கிறிஸ்டின் 1 ரன்களை எடுத்துள்ளனர்.

வீடியோ ; சத்தியமா நம்பவே முடியல..! செம கேட்ச் பிடித்த தமிழக வீரர்…வேற லெவல்..! ஐபிஎல் 2021…!

12.5வது ஒவேரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் லைன் அதனை எதிர்கொண்டார். அப்பொழுது அந்த பந்தை அடித்த கிறிஸ் லைன் குறிப்பிட்ட தூரம் சென்றது. அதனை அட்டகாசமாக பவுலரே (வாஷிங்டன் சுந்தர் ) அதனை பிடித்துள்ளார்.

அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை கிறிஸ் லைன் விக்கெட் எடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக 200+ ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் எடுத்திருப்பார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கிடைத்த முக்கியமான விக்கெட் என்று கூட சொல்லலாம்.

வீடியோ: