ரோஹித் சர்மா இப்படி தான் பண்ணிட்டே இருப்பார் ; ஆனாலும் அவர் செய்த ஒரு விஷயத்தை நான் மறக்க மாட்டேன் ; பும்ரா ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டி இந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்தபோவதாக அறிவித்த பிசிசிஐ, அதனை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை பெற்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகிய ஐபிஎல் டி20 லீக் இதுவரை 14 சீசன் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டிகள் வந்துவிட்டால் போது ஒரு வீரர் பற்றி இன்னொரு வீரர் சொல்வது வழக்கம் தான்.

அதேபோல ரோஹித் சர்மாவை பற்றி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். பும்ரா ரோகித் சர்மா பற்றி கூறுகையில் ;

ரோஹித் சர்மா மற்றும் எனக்கு இடையே நல்ல ஒரு உறவு உள்ளது. நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகிய போது ரிக்கி பாண்டிங் தான் கேப்டனாக விளையாடி வந்தனர். ஆனால் எனக்கு ரோஹித் சர்மா கேப்டனாக பிறகு எனக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது.

ரோஹித் ஷர்மாவுக்கு என்மேல் அதிக நம்பிக்கை உள்ளது. நான் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளும் போது அவர் என்னை கவனத்தார். அதுமட்டுமின்றி, அவர் எப்பொழுதும் என்னை ஆதரித்து கொண்டே தான் வருகிறார். அதுமட்டுமின்றி , முக்கியமான நேரங்களில் என்னை பவுலிங் செய்ய சொன்னார் ரோகித் சர்மா. அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது.

ஒரு சில நேரங்களில் எங்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும், அது எங்கள் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஒரு சில நேரங்களில் நாம் நினைக்கும் அனைத்து விஷயங்களும் நடக்காது. அப்பொழுது ரோஹித் சர்மா இந்திய அணியின் சுற்று சூழலை அமைதியாக வைக்க உதவி செய்வார்.

அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும். அந்த மாதிரியான கடுமையான சூழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதுமட்டுமின்றி, நான் என்ன செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறானோ அதே போல அதனை செய்தேன் என்று கூறியுள்ளார் பும்ரா…!