Advertisement
HomeTrending Newsஇந்த போட்டியை விட எங்களுக்கு இதுதான் முக்கியம் ; அதற்கு தான் இந்த மாற்றங்கள் ;...

இந்த போட்டியை விட எங்களுக்கு இதுதான் முக்கியம் ; அதற்கு தான் இந்த மாற்றங்கள் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனை தெடர்ந்து டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில் தொடங்கிய நான்காவது போட்டி சென்ட்ரல் ப்ரோவ்ர்டு பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி அதிரடியான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஆனால் 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 114 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் ரோஹித் 33, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, ரிஷாப் பண்ட் 268, சஞ்சு சாம்சன் 5* ரன்களை அடித்துள்ளனர்.

போட்டிக்கு முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ; ” நாங்களும் பவுலிங் செய்த தான் நினைத்தோம். இருப்பினும் பிட்ச் எப்படி செயல்பட போகிறது என்பது தெரியவில்லை. அதனால் முடிந்தவரை நாங்கள் ரன்களை அடிக்க வேண்டும். எங்களால் முடிந்த வரை அதிகப்படியான ரன்களை அடிப்போம்.”

“ஒரு அணியாக நாங்கள் எங்க இருக்கிறோம் என்பது நன்கு புரிகிறது. அதனால் இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேண்டும். அவர்களுக்கு போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்தால் தான் அவர்களிடம் என்ன திறமை உள்ளத்தில் என்பது தெரியவரும்.”

“இந்த போட்டியை காட்டிலும் டி-20 உலகக்கோப்பை போட்டியை மனதில் வைத்து தான் விளையாட வேண்டும். இந்த மாதிரியான போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும். அதனால் மூன்று மாற்றங்களை செய்துள்ளோம், அதில் ஹர்டிக் பாண்டிய, ஸ்ரேயாஸ் , ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஷானி, அக்சர் பட்டேல் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை விளையாட உள்ளனர் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular