எங்களை பற்றி தெரியுதா ?? நாங்க இப்படித்தான் பண்ணுவோம் ; சஞ்சு சாம்சன் ; அப்படி என்ன சொன்னார் ?

0

நேற்று நடந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு முக்கியமோ இல்லையோ !! ஆனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் வர ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதில் சதேகமில்லை. நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிகவும் குறைவான ரன்களை மட்டுமே அடித்தனர். ஆனால் போக போக ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் 60 பந்தில் 101 ரன்களை விளாசினார்.

அதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 189 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ரூட்டுராஜ் கெய்க்வாட் 101, டூப்ளஸிஸ் 25, மொயின் அலி 21, சுரேஷ் ரெய்னா 3, அம்பதி ராயுடு 2, ரவீந்திர ஜடேஜா 32 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 190 ரன்களை அடிப்பார்களா இல்லையா என்ற நினைத்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

ஏனென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை அடிக்க உதவியாக இருந்தனர். அதில் ஈவின் லீவிஸ் 27, ஜெய்ஸ்வால் 50, சஞ்சு சாம்சன் 28, ஷிவம் துபே 64, பிலிப்ஸ் 14 ரன்களை விளாசியுள்ளனர்.

அதனால் 17.3 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதனால் புள்ளிபட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியை கீழே தள்ளிவிட்டு 6வது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

போட்டி முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணியின் கேப்டன் அளித்த பேட்டியில் ; நாங்கள் இப்படி தான் எப்பையுமே விளையாடுவோம். ஆனால் சில போட்டிகளில் அதனை வெளிப்படுத்த முடியவில்லை. எங்கனால் முடியாது என்று பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு தெரியும் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று. அதிலும் குறிப்பாக ஒபெநிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். ஷிவம் துபே ஆட்டத்தை நங்கள் கடந்த மூன்று போட்டிகளில் கவனித்து கொண்டு தான் வருகிறோம்.

இந்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று நங்கள் நினைத்தோம். அதேபோல தான் அவர் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் மிகவும் கடினமாக தான் பயிற்சி செய்து கொண்டு வந்தார். கெய்க்வாட் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அவரை பாராட்டியே ஆகணும். ஏனென்றால் அவர் விளையாட்டில் கொஞ்சம் கூட பயம் இல்லை என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here