தோனி இல்லையா ? இந்திய அணியில் இவர் விளையாட்டை பார்க்க எவ்வளவு பணம் வேணாலும் கொடுக்கலாம் ; முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கூறியுள்ளார்..! யார் அது ?

WTC 2021; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சம்பிரோஷிப் போட்டிக்கான இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் டெஸ்ட் வீரர்கள் விவரம் ;

ரோஹித் சர்மா, விராட் கோலி, சுமன் கில், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷாப் பண்ட், ரவி சந்திரா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷாமி, முகமது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா, பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான Sir Curtly Ambrose அளித்த பேட்டியில்; இந்திய அணியின் வீரர் , இவர் விளையாட்டை பார்க்க எவ்வளவு பணம் வேணாலும் கொடுத்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

அதில் 32 வயதான விராட் கோலி ஆட்டம் மிகவும் அற்புதமாக இருக்கும். நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவரது அதிரடியான ஆட்டத்தை பார்க்க எவ்வளவு பணம் வேணாலும் கொடுக்கலாம். விராட் கோலி “டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி டி-20, ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக தான் விளையாடி வருகிறார் என்று Sir Curtly Ambrose கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் Sir Curtly Ambrose.