Advertisement
HomeIPLசெய்யும் தவறுகள் எல்லாம் வீரர்கள் தான் ; ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாக பேசிய ; முன்னாள்...

செய்யும் தவறுகள் எல்லாம் வீரர்கள் தான் ; ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாக பேசிய ; முன்னாள் வீரர் ;

இந்திய கிரிக்கெட் அணி : ஐசிசி போட்டிகளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் மூன்று முறை கோப்பைகளை வென்றுள்ளனர். அவரை (தோனி) அடுத்து விராட்கோலி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அதிக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் மோசமான நிலையில் தான் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் :

ஐபிஎல் டி-20 தொடரில் அதிகபட்சமாக கோப்பையை வென்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் சேரும். அதுமட்டுமின்றி, அதனை ரோஹித் சர்மா தான் கேப்டனாக வழிநடத்தி வந்துள்ளார். அதனால் இந்திய கிரிக்கெட் அணியும் எப்படியாவது உலகக்கோப்பை போட்டியில் வென்றுவிடும் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏனென்றால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றதா நிலையில் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது இங்கிலாந்து அணி. அதுமட்டுமின்றி, இந்த தொடரிலும் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு பேசிய அளவில் இல்லை என்பது தான் உண்மை.

உலகக்கோப்பை போட்டியில் தோல்வி பெற்று இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவார்கள். அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் பேட்டி :

“உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் தோல்வி பெற்றதால் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளை பற்றி பேச கூடாது. எனக்கு தெரிந்து ஐபிஎல் டி-20 போட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது நல்ல விஷயம் தான். ஐபிஎல் போட்டிக்கு முன்பு வீரர்களை தேர்வு செய்வதில் பல சிரமம் இருந்தது. ஒவ்வொரு முறையும் போட்டிகளில் தோல்வி பெற்றால் ஐபிஎல் போட்டியை குறை சொல்வது சரியாக இல்லை.”

“ஐசிசி போட்டிகளில் தோல்வி பெற்றால் வீரர்கள் தான் காரணம். அவர்களை பற்றி பேசுங்கள். அதனை விட்டுவிட்டு ஐபிஎல் போட்டியை பேசுவது நியாயம் கிடையாது. இப்பொழுது நடக்கும் நல்ல விஷயம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர்கள் இடம்பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தியன் தான் இந்திய அணியின் பயிற்சியளராக இருக்க வேண்டும்.”

“வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து கொண்டு பணத்தை சம்பாரித்து கொண்டு செல்கிறார்கள். அது சரியான விஷயம் கிடையாது. ஐபிஎல் போட்டிகளில் நான் லக்னோ அணியின் ஆலோசகராக உள்ளேன். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் பணிபுரிய வேண்டும். ஏனென்றால் பிக் பாஸ், தென்னாபிரிக்கா டி-20 லீக் போன்ற போட்டிகளில் இந்திய பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.”

இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான நிலைக்கு ஐபிஎல் போட்டிகள் எந்த விதத்தில் தவறான விஷயமாக இருக்கிறது ? உங்கள் கருத்து என்ன ? ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வேண்டுமா ? இல்லையா ?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular