இவருடைய ரன்களை தாண்டுவது மிகவும் கடினம் தான்..! வார்னர் புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்..! யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் சாதனையை முறியடிக்க போகும் ஒரே வீரர் என்றால் அது விராட் கோலி என்று தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் கோலியின் அதிரடியான ஆட்டம் தான்.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி சாதாரணமாக குறைந்தபட்ச ரன்களான 50 அடிப்பது வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்பொழுது இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் இவர் தான் அதிக சதம் அடித்த வீரர் என்பதில் சந்தேகமில்லை.

விராட் கோலியின் ஆட்டத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை. ஏனென்றால் போட்டிகள் நடைபெற நடைபெற அவரும் முன்னேறி கொண்டே இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பொழுது இருக்கும் கேப்டன்களில் மிகவும் பெஸ்ட் கேப்டனாக விராட் கோலி திகழ்கிறார்.

இதுவரை விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 12169 ரன்களையும், 7490 ரன்களையும், அடித்துள்ளார். அதுமட்டுமின்றி டி-20 போட்டிகளில் 3000-துக்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 43 சதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 27 சதம் அடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், இப்பொழுது இருக்கும் வீரர்களில் யார் அதிகம் சதம் அடித்துள்ளார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் முதல் இடத்தில விராட் கோலி (70 சதம் ), இரண்டாவதாக வார்னர் (43 சதம் ), மூன்றாவதாக கிறிஸ் கெயில் (43சதம் ), நான்காவதாக ரோஹித் சர்மா (40 சதம் ) அடித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரரான வார்னர் ” உண்மையை சொன்னால் எங்களால் அவரை பிடிக்கவே முடியவில்லை ” என்று இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார் டேவிட் வார்னர்.