எல்ல போட்டிகளிலும் தோற்று கொண்டே இருக்க முடியாது ; இதுதான் நடக்க போகிறது ; ரோஹித் சர்மா உறுதி ;

0

ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டியில் இலங்கை அணி முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தசன் ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர்.

லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி கொண்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து திணறிக்கொண்டு வருகிறது என்பது தான் உண்மை. ப்ளேயிங் 11ல் ஜடேஜா இல்லாதது பெரிய தலைவலியாக தான் மாறியுள்ளது இந்திய அணிக்கு.

தொடர்ந்து அணியில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டு விளையாடி வருகிறது இந்திய. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ;

“நாங்களும் முதலில் பவுலிங் செய்ய தான் நினைத்தோம். கடந்த போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அதனால் பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. பரவாயில்லை, இந்த முறையும் நாங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் அதிக ரன்களை அடிக்க போகிறோம்.”

“இதேபோல தான் டி-20 உலகக்கோப்பை போட்டிகளிலும் நடைபெற உள்ளது, அதனை மனதில் வைத்து கொண்டு தான் விளையாட போகிறோம். ஏனென்றால் அதிகமான போட்டிகளில் தோல்வியை பெற முடியாது. இது போன்ற போட்டிகளில் விளையாடிய பிறகு தான் தெரியும் நாம் எப்படி அவர்களை தடுக்க போகிறோம் என்று. இந்த மாதிரியான போட்டிகளில் லென்த் , லைன் மற்றும் பவுண்டரிகளை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here