HomeTrending Newsஇந்திய அணியில் இவர் இப்படி விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை ; வெஸ்ட் இண்டீஸ்...

இந்திய அணியில் இவர் இப்படி விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை ; வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த இரண்டாவது போட்டியில் நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் மற்றும் மாயேர்ஸ் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினர். அதில் ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பின்னர் கேப்டன் பூரான் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் அதிரடியான விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 311 ரன்களை அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதில் ஷாய் ஹோப் 115, மாயேர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35, பூரான் 74, போவெல் 13 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 312 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு த்ரில் ஆட்டம் காத்திருந்தது. தொடக்க வீரர் மற்றும் கேப்டனானஷிகர் தவான் முதல் போட்டியை போல பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.

இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 312 ரன்களை அடித்து 2 விக்கெட்டை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய. அதுமட்டுமின்றி இந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் ; “உண்மையிலும் கடைசி இரு ஓவர்கள் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இறுதி 6 ஓவருக்கு முன்பே எங்களுக்கு நன்கு தெரியும் தோல்வி தான் என்று. அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு விக்கெட் (அக்சர் பட்டேல்) மட்டும் தான் தேவையாக இருந்தது.”

“யாருமே எதிர்பார்க்கவில்லை, அக்சர் பட்டேல் இப்படி விளையாடுவார் என்று, உண்மையிலும் சிறப்பாகி விளையாடினர். அதுமட்டுமின்றி எங்கள் அணியின் தொடக்க வீரரான ஷாய் ஹோப்-க்கு இது 100வது ஒருநாள் அதில் அவர் சதம் அடித்தது சந்தோசமாக உள்ளது. எங்களால் முடிந்தவரை பேட்டிங் சிறப்பாக தான செய்தோம் என்று நிக்கோலஸ் பூரான் வருத்தமாக பேசியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img