HomeTrending Newsஎங்களுக்கு ஆசிய கோப்பையை விட இந்திய அணிக்கு எதிரான போட்டியை நினைத்து தான் கவலைப்படுகிறோம் ;...

எங்களுக்கு ஆசிய கோப்பையை விட இந்திய அணிக்கு எதிரான போட்டியை நினைத்து தான் கவலைப்படுகிறோம் ; பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக் ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 6 அணிகளும் தீவிரமான பயிற்சியில் இடப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இந்த ஆசிய கோப்பை 2022யில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங் போன்ற நான்கு அணிகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட உள்ளனர். ஏனென்றால் இந்த நான்கு அணிகளுள் ஒரு அணிதான் ஆசிய கோப்பையில் 6வதாக அணியாக இடம்பெற முடியும்.

சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர். அதுமட்டுமின்றி புதிய மற்றும் இளம் வீரர்களான ரவி பிஷானி, அவேஷ் கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணிக்கு முதல் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 2021 போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது இந்திய அணி. அதனால் இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் இந்திய அணி செய்து வருகின்றனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் நிச்சியமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக தான் இருக்கும். இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அஹமத் கூறுகையில் ; ” எங்கள் அணி (பாகிஸ்தான்) ஒரு அணியாக சிறப்பாக இருக்க வேண்டும். இந்த முறை 40 வயதான சோயிப் மாலிக் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.”

” ஏனென்றால் இந்த மாதிரி முக்கியமான நேரங்களில் இவர்களை போன்ற வீரர்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உண்மையிலும் எங்களுக்கு ஆசிய கோப்பையை பற்றி எந்த விதமான கவலையும் இல்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிரான 2 – 3 போட்டிகளை நினைத்தால் தான் கவலையாக உள்ளது.”

“ஒருவேளை இந்திய அணியை வென்றுவிட்டால், நிம்மதியாக இருக்கும். ஆனால் அதற்கு சிறந்த பிளான் தேவைப்படும் என்று கூறியுள்ளார் அஹமத்.” கடந்த ஆண்டு தோல்வி பெட்ரா இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை பழிதீர்த்து கொள்ளுமா ? இந்திய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img