இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் போல் பாகிஸ்தான் அணியில் யாரும் இல்லை ; அதனால் இந்திய அணிக்கு நல்லது தான் ; முன்னாள் பாகிஸ்தான் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் இந்த மாதம் இறுதியில் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது .

ஆசிய கோப்பை 2022:

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளனர். அதில் பாகிஸ்தான், இந்திய, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் மீதமுள்ள 6வது இடத்திற்கு நான்கு அணிகள் (ஐக்கிய அரபு, குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர்) போன்ற நாடுகள் போட்டியிட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் ; ஆசிய கோப்பை 2022:

ஆசிய கோப்பை ஆரம்பித்து இரண்டாவது நாள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 2021 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை பெற்றது.

அதனால் இந்த முறை இந்திய அணி வெல்ல வேண்டுமென்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். சமீப காலமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11 சற்று வலுவாக மாறியுள்ளது தான் உண்மை. அதனால் நிச்சியமாக ஆசிய கோப்பை 2022 இந்திய அணி வெல்ல தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

இருப்பினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தான் அதிக பலம் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆக்கிப் ஜாவத் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய அவர் ; “இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டும் நின்று விளையாடினால் தனி நபராக போட்டியை வென்றுவிடுவார். அதேபோல தான் பாகிஸ்தான் அணியில் பாகார் ஜமான்.”

“சரியாக விளையாடினல் நிச்சியமாக அதிக ரன்களை அடிப்பார். ஆனால் மிடில் ஆர்டர் தான் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக மாற்றம் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆல் – ரவுண்டர் (ஹர்டிக் பாண்டிய). ஆமாம் பாகிஸ்தான் அணியில் ஹர்டிக் பாண்டிய போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் கிடையாது. அதனால் இந்திய அணிக்கு அது பலம் தான் என்று கூறியுள்ளார் ஜாவத்.”

28ஆம் தேதி அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். அதில் இந்திய அணி வெல்லுமா ?