ஐசிசி போட்டிகள் :
கடந்த சில ஆண்டுகளாவே ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இறுதியாக தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் டி-20 உலகக்கோப்பை போட்டியில் வென்றிருக்கிறது. அதற்கு பிறகு விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி தொடரில் வெற்றிபெற முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.


இந்திய அணியின் அடுத்த இலக்கு :
டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியால் சரியாக விளையாடாத நிலையில் அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது இந்திய. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாத நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
அதனால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல வேண்டுமென்றதால் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடக்கும் தொடர் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடுவது சிரமம் தான் என்று பிசிசிஐ சில வாரங்களுக்கு முன்பு கூறியுள்ளனர்.


சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் மோசமான நிலையில் வெளியேறியுள்ளது இந்திய. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் கூறுகையில் : ” முதலில் இந்திய னியின் முக்கியமான வீரர்களை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அவ்வப்போது அணியில் இருக்கும் வீரர்களை வெட்டி விட்டு கொண்டு வருகிறோம். ஒரே அணியாக விளையாடுவதே கிடையாது. அதிலும் குறிப்பாக அடிக்கடி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க கூடாது.”
“இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் நிலையில் அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக வேண்டும். குறிப்பாக விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடர்ச்சியாக அணியில் பங்கேற்று விளையாட வேண்டும். உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி கொண்டு நேரத்தில் இவங்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுத்தால் இந்திய அணியின் ஆணிவேரே இல்லாமல் போய்விடும். முக்கியமான வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுப்பதால் மட்டுமே இறுதியாக நடைபெற இரு உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.” என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.