HomeTrending Newsஇது மட்டும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை ; இவர்களுக்கு இது நல்ல பாடமாக இருக்கும் ;...

இது மட்டும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை ; இவர்களுக்கு இது நல்ல பாடமாக இருக்கும் ; ரோஹித் சர்மா பேட்டி ;

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாடினர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். பின்பு ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 6, ரோஹித் சர்மா 72, விராட்கோலி 0, சூரியகுமார் யாதவ் 34, ஹர்டிக் பாண்டிய 17, ரிஷாப் பண்ட் 17, தீபக் ஹூடா 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்க வீரர்களான நிஸ்ஸங்க மற்றும் மெண்டிஸ் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 100க்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னெர்ஷிப் செய்து விளாசினார்கள். ஆனால் அவர்கள் ஆட்டம் இழந்த பிறகு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது இலங்கை.

இறுதி ஓவர் வரை விளையாடிய இலங்கை அணி 1 பந்து மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இலங்கை. அதுமட்டுமின்றி, புள்ளிபட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது இலங்கை…!

போட்டி முடிந்த பின்பு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் ; “நாங்க முதல் பாதி இன்னிங்ஸ்-ல் சிறப்பாக தான் விளையாடினோம். ஆனால் 10 -15 ரன்கள் மட்டும் குறைவாக தெரிகிறது. இரண்டாவது இன்னிங்ஸ்-ல் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர்களுக்கு பெரியளவில் விளையாடவில்லை, அதுமட்டுமின்றி ஷாட்ஸ் எப்படி விளையாட வேண்டுமென்று கற்றுக்கொள்ள வேண்டும்.”

“இந்த தோல்விகளை சந்தித்த பிறகு தான் அணியின் வேலை எப்படி இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. ஆனாலும் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பவுலிங் செய்து மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்றினார்கள், அது நிச்சியமாக இலங்கை அணிக்கு கடினமாக தான் இருந்திருக்கும்.”

“இந்திய அணிக்கு புதிதாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடி உள்ளனர். அதில் ஆவேஷ் கானுக்கு உடல்நிலை சரியல்லாத காரணத்தால் பிட்னெஸ் டெஸ்ட்-ல் சரியாக விளையாட முடியாமல் வெளியேறினார். உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பு இவர்களை வைத்து போட்டிகளில் முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.”

“அது சரியாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து நாங்கள் பெரிய அளவில் போட்டிகளில் தோல்வி பெற்றதே இல்லை. இது போன்ற போட்டிகள் நிச்சியமாக எங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுப்பார்கள். எங்களுக்கு நாங்களே இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் அழுத்தத்தை கொடுத்து கொண்டு தான் விளையாடி வருகிறோம்.”

“பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை போராடி தான் தோல்வி பெற்றுள்ளோம். ஆனால் அர்ஷதீப் சிங்-க்கு பாராட்டுகள். ஏனென்றால், டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் அர்ஷதீப் சிங் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா…!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img