வேறு வழியில்லை இந்த இரு மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும் ; டாஸ் -க்கு பின் பேசிய ஷிகர் தவான் ;

0

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது நியூஸிலாந்து.

இந்திய அணியின் தேர்வு குழு செய்யும் தவறுகள் :

சமீபத்த காலமாகவே இந்திய அணியால் சர்வதேச அணிகள் பல கலந்து கொள்ளும் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் சரியாக விளையாட முடிவது இல்லை. தொடர்ந்து மோசமான நிலையில் வெளியேறுவது ரசிகர்கள் இடையே கோபத்தை உண்டாக்கி வருவது தான் உண்மை. சமீப காலமாகவே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை.

தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றதில் இருந்து ரிஷாப் பண்ட் -கான வாய்ப்பு என்பது குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது தான் உண்மை. அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன்) ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு நல்ல பார்ட்னெர்ஷிப்-ஐ ஏற்படுத்தினார். அதில் 36 ரன்களை அடித்திருந்தார் சஞ்சு சாம்சன். ஆனால் ரிஷாப் பண்ட் வெறும் 15 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார்.

டாஸ்-க்கு பிறகு பேசிய ரிஷாப் பண்ட் :

“நாங்களும் முதலில் பவுலிங் செய்ய வேண்டுமென்று தான் நினைத்தோம், ஏனென்றால் ஈரப்பதம் இருப்பதால் விக்கெட் கைப்பற்ற அதிகவாய்ப்புகள் இருக்கும். இதே நிலை தான் முதல் ஒருநாள் போட்டியிலும் நடைபெற்றது. இருந்தாலும் நாங்க பாசிட்டிவ் ஆக செல்ல போகிறோம். இந்த போட்டியில் இரு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். ஷர்டுல் தாகூர்-க்கு பதிலாக தீபக் சஹாரும், சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம்பெற்றுள்ளனர். “

“எனக்கு தெரிந்து 10% முன்னேற்றம் மட்டுமே தேவைப்படுகிறது. அதனை செய்தலே போட்டியில் பெரிய மாற்றம் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக டெத் ஓவர்களில் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதோ :

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், உம்ரன் மாலிக், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here