விராட்கோலி கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் விராட்கோலி கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடி சதம் அடித்தார்.


அதில் இருந்து இன்னும் வரை ஒரு சதம் கூட விராட்கோலி அடிக்கவில்லை என்பதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் தான் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை, அதுவும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சமீப காலமாக விராட்கோலி அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது தான் உண்மை. அதனால் விராட்கோலி இந்த உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இருப்பினும் நிச்சயமாக விராட்கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று பலர் விராட்கோலி-க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் தொடக்க வீரரான ராபின் உத்தப்பா இதனை பற்றி பேசிய அவர் ; “விராட்கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி விளையாடு அப்படி விளையாடு என்று யாரும் சொன்னதே இல்லை .”
“அதனால் எனக்கு தெரிந்து அவருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நாம் இல்லை, அதற்கு தகுதியும் இல்லை. இதுவரை 70 சதம் அடித்துள்ளார் விராட்கோலி, நிச்சியமாக இன்னும் 30 அல்லது 35 சதம் கூட அடிப்பார், அதற்கு அவரிடம் திறமை உள்ளது. அதனால் விராட்கோலியை அப்படியே விட்டுவிடுங்கள். அவரது விளையாட்டை அவர் விளையாடுவார்.”


“அவரது பிரச்சனை என்ன என்பதை வர புரிந்து கொண்டால் நிச்சியமாக கம்பேக் கொடுப்பார். அதனால் அவருக்கு கொஞ்சம் தனிமையில் இருக்க விடுங்கள். அவருக்கு ஓய்வு வேண்டுமென்று நினைத்தால் அவர் எடுத்துக்கொள்ளட்டும். சில போட்டிகளில் அவர் விளையாட ஆசைப்பட்டால் விளையாட அனுமதிக்க வேண்டும்.”
“அவர் எந்த இடத்தில விளையாட வேண்டுமென்று சொல்ல கூடாது. அவர் போட்டியின் வெற்றியாளர். இதுவரை நடந்த பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் விராட்கோலி. அதனால் அவர் எந்த இடத்தில் விளையாட வேண்டுமென்று நாம் யாரும் எதை பற்றி பேசவேகூடாது என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.”
விராட்கோலி இனிவரும் போட்டிகளில் ஆவது சிறப்பாக விளையாடுவாரா ?? ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விராட்கோலி விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அதன்பிறகு ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.