மும்பை அணியை வெல்ல நான் செய்த விஷயம் இதுதான் ; அதனால் தான் வெற்றியே ; மயங்க் அகர்வால் ஓபன் டாக் ;

0

நேற்று 23வது போட்டியில் களமிறங்கிய மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பவுலிங் செய்ய போவதாக முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி, அதிரடி மன்னனான லிவிங்ஸ்டன் எதிர்பாராத விதமாக 2 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடித்தனர்.

அதில் மயங்க் அகர்வால் 52, ஷிகர் தவான் 70, பரிஸ்டோவ் 12, லிவிங்ஸ்டன் 2, ஜிதேஷ் சர்மா 30, ஷாருக்கான் 15 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை. வழக்கம்போல தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ப்ரேவிஸ் போன்ற வீரர்களால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரமாரியாக ரன்களை குவிந்தன. இருப்பினும் இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 186 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதில் ரோஹித் சர்மா 28, இஷான் கிஷான் 3, ப்ரேவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார் யாதவ் 43, பொல்லார்ட் 10, உனட்கட் 12போன்ற ரன்களை அடித்துள்ளனர். அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

போட்டி முடிந்த பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான மயங்க் அகர்வால் கூறுகையில் ; “இன்றைய போட்டி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த வெற்றியை நான் அனைத்து வீரர்களுக்கும் சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன். இந்த போட்டியில் பல ஏற்றம் மற்றும் இறக்கம் இருந்தது.”

“போட்டி தொடக்கத்தில் எங்களுக்கு சாதகமாக போவது. ஆனால் , பின்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ப்ரேவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சற்று அதிரடியான ஆட்டத்தை விளையாடினார்கள். அதனால் எங்கள் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.”

“அதனால் முக்கியமான விக்கெட்டை கைப்பற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை (ரபாட) களமிறக்கி பவுலிங் செய்ய வைத்தேன். அதேபோல, விக்கெட்டையும் கைப்பற்றிவிட்டோம். ஒவ்வொரு போட்டியிலும் 5 சதவீதம் முன்னேறினாலே நாம் வெற்றியை நோக்கி பயணிப்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் மயங்க் அகர்வால்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here