ரசிகர்கள் ஓட அந்த கனவை நிறைவேற்றிவிட்டோம் ; தோனி பெருமிதம் ; என்ன சொன்னார் தெரியுமா ? முழு விவரம் ;

IPL 2021: நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதினார். அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 134 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 2, சஹா 44, வில்லியம்சன் 11, பிரியம் கர்க் 7, அபிஷேக் சர்மா 18, ஹோல்டர் 5, ரஷீத் கான் 17 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சுலபமாக ரன்களை அடித்துவிடும் என்று நினைத்து கொண்டு இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் 45, டூப்ளஸிஸ் 41 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் சிஎஸ்கே அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் இருந்தது. ஆனால் இறுதி ஓவர் வரை விளையாடி 4 விக்கெட்டை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே அணி. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டியில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் உறுதியாக நுழைந்தது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து தோனி போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் ; கடந்த ஆண்டு தான் எங்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது.

ஏனென்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதுதான் முதல் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் அப்படி நடந்தது. சிஎஸ்கே ரசிகர்களை பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் அவர்கள் சிஎஸ்கே வீரர்களை எப்பொழுதும் ஆதரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அவர்கள் எங்கள் மீது மிகவும் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் ஏமாற்றமே நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அவர்களது நம்பிக்கையை காப்பாத்திவிட்டோம் ! ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம் என்று தோனி கூறியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சிஎஸ்கே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.