இந்த உண்மையை கண்டிப்பாக ஒப்புக்கொண்டு தான் ஆகா வேண்டும் ; ரோஹித் சர்மா சொன்ன உண்மை ?

போட்டி 42: நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதல் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்னர் 136 ரன்கள் தான், அதனால் விரைவாக அடித்துவிடும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தொடக்கத்தில் இருந்து பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை.

அதில் திவாரி மட்டும் அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்பு ஹார்டிக் பாண்டிய பேட்டிங் செய்தார். அவர் எப்படியும் போல ஆட்டம் இழந்து விடுவார் என்று நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஹார்டிக் பாண்டிய.

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் இருந்து இப்பொழுது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியை முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் அளித்த பேட்டியில் ;

நான் சரியாக விளையாடவில்லை..! அதனை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். நாங்க என்ன பிளான் செய்தோமோ..! அதனை நடத்த வேண்டும் அதுதான் முக்கியம். அப்போதுதான் எங்களுக்கு நம்பிக்கை வரும். அதிலும் இஷான் கிஷான் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர், அதனால் அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவார்.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் ஹார்டிக் பாண்டிய, திவாரி மற்றும் பொல்லார்ட் ஆகிய மூவரும் சிறப்பாக ரன்களை அடித்து கொடுத்துள்ளனர். இவர்களுது பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் பொல்லார்ட் பவுலிங் செய்து மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்க போகிறார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

கடந்த இரு ஆண்டுகளாக (2019, 2020)கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை ப்ளே – ஆஃப் குள் வரவே கடினமாக இருப்பது போல தான் தெரிகிறது.என்ன செய்ய போகிறது மும்பை இந்தியன்ஸ் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!