இந்திய அணியில் இது நடந்திருக்க வேண்டும் …! ஆனால் அது நடக்கவில்லை…! விராட்கோலி சொன்ன காரணம் தெரியுமா ? முழு விவரம் இதோ ..!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி..!
ஏனென்றால் இந்திய அணிக்கு பேட்டிங் சரியாக அமையவில்லை. அதனால் சரியான நேரத்தில் அதிக ரன்களை எடுக்க முடியாத காரணத்தால் இந்திய அணியால் குறைவான ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய அணியை வென்று முதல் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது நியூஸிலாந்து அணி.
போட்டிகள் முடிந்த பிறகு விராட்கோலி தோல்வியை குறித்து பேசியதில் ; சரியான மனநிலையுடன் இருக்கும் சரியான நபரை தேர்வு செய்வதில் தவறு நடந்து விட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இனி வரும் போட்டிகளில் அணியை மறுமதிப்பீடு செய்து, எங்கள் பக்கம் நல்ல பலமாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் விராட்கோலி.
நாங்கள் எப்படி ரன்கள் எடுப்பது என்று யோசிக்க வேண்டும். இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் திறமை வாய்ந்தவர்கள் தான். ஆனாலும் இருக்கும் சில தவறுகளை திருத்திக்கொண்டு இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி.
அதிக நம்பிக்கையுடன் காத்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும்தான். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். அதில் சில ரசிகர்கள் பரவவில்லை, இதுவரை சிறப்பாக தான் இந்திய அணி விளையாடியுள்ளது. அதனால் அடுத்த முறை பாத்துக்கொள்ளலாம் என்று அவரவர் மனதை சமாளித்து கொண்டு இருக்கின்றனர்.