இதை நாங்கள் சரி செய்துவிட்டால் , நிச்சியமாக வெற்றி கிடைக்கும்… ; ரோஹித் சர்மாவின் அதிரடியான பேச்சு..!

17வது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான கும்பி இந்தியன்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் மட்டுமே விளாசியுள்ளனர். அதில் டி-காக் 3 ரன்கள், ரோஹித் சர்மா 63 ரன்கள், இஷான் கிஷான் 6 ரன்கள், சூரியகுமார் யாதவ் 33 ரன்கள், பொல்லார்ட் 16 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 1 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்பு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.4 வேர் முடிவில் 132 ரன்களை விளாசியுள்ளனர். அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதில் கே.எல்.ராகுல் 60 ரன்களையும், மயங்க அகர்வால் 25 ரன்கள், கிறிஸ் கெயில் 43 ரன்களை எடுத்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு தோல்விகளை பற்றி பேசிய ரோஹித் சர்மா ; தோல்விக்கு முக்கியமான காரணம் எங்கள் அணியால் அதிகபட்சமான ரன்களை அடிக்க முடியவில்லை. இதே நாங்கள் 150அல்லது 160 ரன்களை அடித்திருந்தால் நிச்சயமாக வெற்றிபெற அதிகம் வாய்ப்பு இருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி பவர் ப்ளே -வில் சிறப்பான முறையில் பந்து வீசியுள்ளார் பஞ்சாப் அணியின் பவுலர்கள். கடந்த நான்கு போட்டியில் நாங்கள் சிறப்பான முறையில் தான் பேட்டிங் செய்தோம், இருந்தாலும் தோல்வி தான் கிடைத்தது. அதனால் நாங்கள் பேட்டிங்கில் அதிக ரன்களை எடுக்க வேண்டும், அவ்வாறு செய்தால் நிச்சியமாக எங்கனால் வெற்றியை கைப்பற்ற முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் 4வது இருக்கிறது.