ஐபிஎல் 2021: இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினார். அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


29 போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று ஆரம்பித்து மே மாதம் தொடக்கத்தில் வரை விளையாடியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் போட்டிகளை உடனடியாக ரத்து செய்தது பிசிசிஐ.
ஆனால் இன்று முதல் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. முதல் போட்டிக்கு முன்பு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில் ; மீண்டும் தொடங்கியது ஐபிஎல் போட்டி. அதனால் புதிதாக தான் ஆரம்பிக்க வேண்டும்.


நாங்கள் முதல் பாதி விளையாடில் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இருந்தாலும் புதிதாக தான் ஆரம்பிக்க வேண்டும். அதவும் ஒவ்வொரு வீரர்களின் மனநிலை பொறுத்துதான் இருக்கிறது. அகிலும் சில வீரர்கள் சர்வதேச போட்டிகள் விளையாடியும் , சி.பி.எல் போட்டிகளில் விளையாடியும் இங்கு வந்துள்ளனர்.


அதனால் அதிக அனுபவம் இருக்கும். போட்டிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், அதற்கு ஏற்ப தான் விளையாடி ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளமிங். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணிக்கு கடந்த ஆண்டு தான் மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆண்டு ஐபிஎல் சீசன் போட்டியில் தான் முதல்முறை ப்ளே -ஆஃப் சுற்றுகள் தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் வீரர்களும் பெரும் சோகத்தில் மூழ்கினார்.


ஆனால் இந்த ஆண்டு அதற்கு நேர் எதிர்மாதிரி தான் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. அதனால் நிச்சியமாக நல்ல ஒரு பேட்டிங் மற்றும் பவுலிங் சேர்ந்த அணியாக சிஎஸ்கே-வை இந்த ஆண்டு பார்க்க முடிகிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்துக்கு செல்லுமா ?