ஸ்ரீசாந்த், இர்பான் போன்ற வீரர்களை வைத்து இந்திய அணி உலகக்கோப்பை வென்றுள்ளது ; இந்த ஆண்டு இவர் இல்லாதது பிரச்சனை இல்லை ;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து உலக கிரிக்கெட் நாடுகளும் இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

ஏனென்றால் அனைத்து அணிகளுக்கும் அங்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெல்லுமா ? இந்திய அணி வலுவாக காணப்படுகிறதா ? இல்லையா ?

இந்திய அணியின் முன்னேற்றம்:

கடந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் லீக் சுற்றில் இருந்து வெளியேறியது. ஆனால் அதன்பின்பு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான சீரியஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது என்பது தான் உண்மை. இந்த ஆண்டு ஆசிய டி-20 போட்டிகளில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இரு முக்கியமான பவுலரும் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

அதனை அடுத்து இப்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றனர். இதில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவா ?

பும்ரா தான் இந்திய அணியின் முக்கியமான பவுலர். ஆனால் சமீப காலமாக அவரது எகானமி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆமாம், ஒரு ஓவருக்கு 10க்கு மேற்பட்ட ரன்களை கொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பதிலாக மாற்று வேராக தீபக் சஹார் அணியில் இடம்பெற்றால் பவுலிங் மற்றுமின்றி பேட்டிங் செய்யவும் முடியும்.

2011ஆம் ஆண்டு பும்ரா இல்லாத நேரத்தில் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், இர்பான் பதான் போன்ற வீரர்களை வைத்து இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டிகளில் வென்றுள்ளனர். அதனால் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற அணியில் இல்லாத நேரத்தில் அவருக்கு அடுத்ததாக இந்திய அணியின் முக்கியமான பவுல்ராக யார் உருவெடுக்க போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு இல்லையென்றும் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here