இவர் எப்படிப்பட்ட திறமையான வீரர் என்று எங்களுக்கு நன்கு தெரியும் ; இந்திய வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர் தான் ; ஹர்டிக் பாண்டிய பேட்டி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதேபோல தான் ஒருநாள் போட்டியிலும் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று மதியம் 3:30 மணியளவில், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட்டை அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி வழக்கம் போலவே பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பரிஸ்டோவ், ஜோவ் ரூட் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதன்பின்பு களமிறங்கிய விளையாடிய அனைத்து வீரர்களும் பார்ட்னெர்ஷிப் செய்து அவர்களால் முடிந்தவரை ரன்களை அடித்து குவித்தனர். அதனால் 45.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் இங்கிலாந்து அணியால் 259 ரன்களை அடிக்க முடிந்தது.

பின்பு 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இங்கிலாந்து அணியை போலவே டாப் மூன்று பேட்ஸ்மேன்களும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர். இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

ஆனால், எதிர்பாராத வகையில் 16 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் நம்பியுடன் விளையாடிய ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய செய்த சிறப்பான பார்ட்னெர்ஷிப் தான் ரன்களை அடிக்க காரணமாக இருந்தது. இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 200 ரன்களை அடித்துள்ளனர்.அதிலும் ரிஷாப் பண்ட் இறுதிவரை விளையாடி ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதனால் 42.1 ஓவர் முடிவில் 261 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; “ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்த போட்டியாகும். இங்கிலாந்து அணி எப்படிப்பட்ட அணி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இருப்பினும் நாங்கள் எப்பொழுதும் ஒரு அணியாக தான் விளையாடி வருகிறோம், அதேபோல பவுலிங் எப்பொழுதும் பிளான் செய்த மாதிரி சரியாக விளையாடியுள்ளோம். என்னை பொறுத்தவரை ஒரு பவுலராக ரன்களை கொடுக்க கூடாது தான் நினைப்பேன். எப்பொழுதும் டாட் பந்தை வீச மட்டுமே நினைப்பேன்.”

“ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய ஓவரில் ஆறு சிக்ஸர் அஅடித்தாலும் பரவாயில்லை, ஒரு விக்கெட்டை கைப்பற்றுவதை தான் நான் நினைப்பேன். இங்கிலாந்து பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன் அவரது வாய்ப்பை பயன்படுத்தி என்னுடைய ஓவரில் சிக்ஸர் அடித்தார். அதேபோல நான் பேட்டிங் செய்யும்போது எப்படி வேணாலும் விளையாடுவேன்.”

“அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் எப்படிப்பட்ட திறமையான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றைய போட்டியில் ரிஷாப் பண்ட் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். நானும் ரிஷாப் பண்ட் செய்த பார்ட்னெர்ஷிப் தான் போட்டியை மாற்றியது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here