நான் இறுதி ஓவர் புவனேஸ்வர் குமாருக்கு கொடுக்காமல் போனதற்கு இதுதான் காரணம் ; ரோஹித் சர்மா அதிரடி பேட்டி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வென்று 1 – 1 என்று சம நிலையில் உள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதல் போட்டியை போல முதலில் களமிறங்கிய இந்திய வீரர்களுக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.

போட்டி தொடங்கிய முதல் பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து கொண்டே இருந்தனர். சரியாக 19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 138 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 0, சூர்யகுமார் யாதவ் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 10, ரிஷாப் பண்ட் 24, ஹர்டிக் பாண்டிய 31, ரவீந்திர ஜடேஜா 27, தினேஷ் கார்த்திக் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களை அடித்தனர். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் கூட சரியாக விளையாடவில்லை, அந்த அளவிற்கு சிறப்பாக பவுலிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.

பின்பு 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. சிறப்பாக விளையாடினாலும், இறுதிவரை சென்ற போட்டி 19.2 ஓவரில் 141 ரன்களை அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக பவுலிங் செய்திருந்தால் நிச்சியமாக போட்டியில் வெற்றியை பெற்றிருக்க முடியும். ஆனால் இறுதி ஓவரில் ரன்களை அதிகமாக கொடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அது சாதகமாக மாறியது. 6 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்பொழுது 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்திருந்த புவனேஸ்வர் குமார் பவுலிங் செய்திருந்தால் நிச்சியமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அது கடினமாக மாறிருக்கும். ஆனால் அந்த நேரத்தில் அறிமுக வேறறம அவேஷ் கான் பவுலிங் செய்தார். அதுமட்டுமின்றி முதல் பந்து NO-BALL அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அது சாதகமாக மாறியது.

இது ரோஹித் சர்மா எடுத்த தவற முடிவு என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் “புவனேஸ்வர் குமாருக்கு இறுதி ஓவர் கொடுத்திருந்தால் என்ன ஆகும் என்று நன்கு தெரியும். ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்த வீரர், பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார்.”

“அதனால் புதிய மற்றும் இளம் வீரர்களான அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான்-க்கு கொடுத்தால் அவர்கள் எப்படி பவுலிங் செய்வார்கள் என்பது பற்றி தெரியும். அது அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இது வெறும் ஒரு போட்டி தான். அவர்களுது திறமையை நான் தான் ஆதரிக்க வேண்டுமே என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இறுதி ஓவரில் ரோஹித் சர்மா செய்தது சரியா ? தவறா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.